thirumavalavan mp wishes pa ranjith

பா.ரஞ்சித், தனது ஒவ்வொரு படங்களிலும் வெவ்வேறு கதைக்களத்தில் அரசியலை மையமாக வைத்து படம் இயக்கி வருகிறார். இப்போது கோலார் தங்க வயல் பின்னணியில் விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கிவருகிறார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இப்படம் அடுத்த மாதம் 26ஆம் தேதி வெளியாகிறது.

Advertisment

இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் இயக்குநர் பா.ரஞ்சித். அவருக்கு திரை பிரபலங்கள் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், எக்ஸ் தளம் மூலமாக இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று பிறந்தநாள் காணும் திரைக்கலை இயக்குநர் அன்பு இளவல் ரஞ்சித்திற்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துகள்” என குறிப்பிட்டு ரஞ்சித்தை டேக் செய்துள்ளார். இதற்கு “பெரும் மகிழ்ச்சி அண்ணா” என ரஞ்சித் பதிலளித்துள்ளார்.

Advertisment