/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/175_22.jpg)
பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாகப் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, சிகிச்சை பலனின்றி கடந்த மாத 25 ஆம் தேதி மாலை உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
பின்பு விமானம் மூலம் இலங்கையிலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்ட பவதாரிணியின் உடல், இளையராஜாவின் சொந்த ஊரான தேனியில் அவரின் தாயார் சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவா ஆகியோரின் மணிமண்டபத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே இளையராஜா குடும்பத்தாருக்கு நேரில் சென்றும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கலும் ஆறுதலும் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் கமல்ஹாசன், கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் சென்னையில் இளையராஜா வீட்டிற்குச் சென்று ஆறுதல் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் வி.சி.க தலைவர் திருமாவளவன் எம்.பி இளையராஜா வீட்டிற்கு நேரில் சென்றார். அப்போது பவதாரிணி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் இளையராஜாவிற்கு ஆறுதல் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)