"இந்த படத்தின் சிறப்பே அதுதான்" - திருமாவளவன் எம்.பி பாராட்டு

thirumavalavan about tamilkudimagan movie

இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தமிழ்க்குடிமகன்'. லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மலையாள நடிகர் லால், அருள்தாஸ், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்குசாம் சி.எஸ் இசையமைத்துள்ள நிலையில் வருகிற 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "சாதிய சிக்கல் குறித்து, சாதிய முரண் குறித்து பேசுகிற ஒரு படம். எத்தனையோ படங்கள் இது குறித்து வெளிவந்திருந்தாலும் இப்படம் ஒரு மாறுபட்ட அணுகுமுறையை கொண்டிருக்கிறது. கதாநாயகனாக சேரன் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அவரை சுற்றியே கதை அமைப்பு இருந்தாலும் கூட தனி நபராக தீர்வு கண்டுவிடுவார் என சொல்லாமல் அவருக்கு உற்ற துணையாக இங்க இருக்கிற முற்போக்கு சிந்தனையாளர்கள், சமூக அமைப்புகள், சட்டம், காவல் துறை, நீதிமன்றம் போன்ற அனைத்தின் ஆதரவோடும் அவர் தன்னுடைய போராட்டத்தில் வெற்றிபெறுகிறார். இந்த படத்தின் சிறப்பே அதுதான். இதுவரையில் சாதிய முரண்களை பேசிய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு தீர்வை சொல்லுகிற, நடைமுறை சாத்திய கூறுகளை சொல்லுகிற ஒரு திரைப்படம் என்பதால் நான் நெஞ்சாரபாராட்டுகிறேன" என்றார்.

cheran Thirumavalavan
இதையும் படியுங்கள்
Subscribe