Skip to main content

"இந்த படத்தின் சிறப்பே அதுதான்" - திருமாவளவன் எம்.பி பாராட்டு

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

thirumavalavan about tamilkudimagan movie

 

இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தமிழ்க்குடிமகன்'. லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மலையாள நடிகர் லால், அருள்தாஸ், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ள நிலையில் வருகிற 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

இந்நிலையில் இப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "சாதிய சிக்கல் குறித்து, சாதிய முரண் குறித்து பேசுகிற ஒரு படம். எத்தனையோ படங்கள் இது குறித்து வெளிவந்திருந்தாலும் இப்படம் ஒரு மாறுபட்ட அணுகுமுறையை கொண்டிருக்கிறது. கதாநாயகனாக சேரன் சிறப்பாக நடித்திருக்கிறார். 

 

அவரை சுற்றியே கதை அமைப்பு இருந்தாலும் கூட தனி நபராக தீர்வு கண்டுவிடுவார் என சொல்லாமல் அவருக்கு உற்ற துணையாக இங்க இருக்கிற முற்போக்கு சிந்தனையாளர்கள், சமூக அமைப்புகள், சட்டம், காவல் துறை, நீதிமன்றம் போன்ற அனைத்தின் ஆதரவோடும் அவர் தன்னுடைய போராட்டத்தில் வெற்றிபெறுகிறார். இந்த படத்தின் சிறப்பே அதுதான். இதுவரையில் சாதிய முரண்களை பேசிய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு தீர்வை சொல்லுகிற, நடைமுறை சாத்திய கூறுகளை சொல்லுகிற ஒரு திரைப்படம் என்பதால் நான் நெஞ்சார பாராட்டுகிறேன" என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.