“கமல் பேசிய கருத்தை அவர்களால் ஏற்க முடியவில்லை” - திருமாவளவன்

thirumavalavan about kamal language issue

காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ‘வெல்கம் பேக் காந்தி’ என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது திருக்குறளை வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

இம்மாதம் 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இதில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, “இன்றைக்கு கமல்ஹாசன் அவர்கள் பேசிய ஒரு பேச்சுக்கு பெரிய எதிர்ப்பு கர்நாடகாவிலே அவருடைய திரைப்படத்தையே திரையரங்குகளில் ஓட்ட விட மாட்டோம் என்றெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது என்ற கருத்தை அவர்களால் ஏற்க முடியவில்லை. ஆனால் 1812ல் எல்லிஸ் அவர்களும் 1852லே ஹென்ரி ஹயசிங்டன் என்பவரும், அவர்கள் எல்லாம் பிரிட்டிஷ் குடிமக்கள் ஆங்கிலேயர்கள் அவர்கள் தமிழை கற்று, தமிழை ஆய்ந்து, தமிழ் அறிஞர்களோடு உரையாடி அவர்கள் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துலு போன்ற மொழிகளை எல்லாம் ஒப்பீடு செய்து அதன் அடிப்படையில் அவர்கள் முன்வைத்த கருத்து இந்த மொழிகளுக்கெல்லாம் மூலமொழி தமிழ் என்ற கருத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

எல்லிஸ் அவர்கள் வாழ்ந்த சமகாலத்தில் வாழ்ந்தவர்தான் அந்த ஹென்ரி ஒயின்ஸ்டன் என்பவரும், அவருக்கு பிறகுதான் எல்லிஸுக்கு பிறகு 40 ஆண்டுகளுக்கு பிறகு 1856லே கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒட்டுலக்கணம் எழுதுகிறார் இந்த மொழிகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்கிற செய்தியை தாண்டி இந்தியாவில் பேசப்படக்கூடிய பல்வேறு மொழிகளுல் மிகவும் தொன்மை வாய்ந்தது சிறப்புக்குரியது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் தான் என்கிற செய்தியையும் சொல்லுகிறார்கள். அந்த காலத்திலே பாலிமொழி இருந்தது, அந்த காலத்திலே சமஸ்கிருதம் இருந்தது, இன்றைக்கு பாலி மொழியை பேச யாருமில்லை பௌத்தம் புத்தரே பேசிய மொழி பாலிமொழி என்று அறியப்படுகிறது. இப்போது இப்போதைக்கு அது பேச்சு வழக்கிலே இல்லை சமஸ்கிருதம் சான்ஸ்கிரிட் இன்றைக்கு பேச்சு வழக்கிலே இல்லை. அந்த சமகாலத்தில் தோன்றியால் அல்லது அதற்கு முன்பு தோன்றிய வரலாற்று தரவுகளை கொண்ட தமிழ் மொழி இன்றைக்கும் உயிர்ப்போடு இருக்கிறது. உலகம் தழுவி அளவில் வலிமை பெற்றிருக்கிறது.

புதுமையை உள்வாங்கி இருக்கிறது தமிழ் மொழிக்குள்ள சிறப்பு தொன்மையும் புதுமையும் இணைந்த ஆளுமை மிக்க ஒரு மொழி பல மொழிகள் தோன்றி வளர்ந்து முதுமை அடைந்து மறைந்து போய்விட்டன, தமிழ் நிலைத்துள்ளது. இன்றைக்கு கணினி மொழி வந்துவிட்டது. அது புதுமை. கணினிக்கு ஏற்ப தமிழ் தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கான செறிவை பெற்றிருப்பதால் செம்மை அடைந்திருப்பதால் அது செம்மொழி. தமிழர்களின் மாண்பை பறைசாற்றுகிற எத்தனை படைப்புகள் இருந்தாலும் அந்த 18 கீழ்க்கணக்கு நூல்களிலே, திருக்குறள் மட்டும்தான் உலகளாவிய நூற்றுக்கணக்கான மொழிகளில், மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பெற்ற பெருமுக்கிமுள்ள நூல், திருக்குறள்” என்றார்.

Thirumavalavan
இதையும் படியுங்கள்
Subscribe