Skip to main content

”நம்மதான் நம்மல கம்மியா நெனக்கிறோம்” - ட்ரெண்டிங்கில் தனுஷ் பட ட்ரைலர் 

 

Thiruchitrambalam trailer goes viral

 

செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்துள்ளார். நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் வரும் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

இதனையொட்டி நேற்று திருச்சிற்றம்பலம் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரொமான்டிக் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்ததோடு, 2 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்