பிரபல ஹீரோவுடன் கூட்டணி - 'திருச்சிற்றம்பலம்' பட இயக்குநரின் அடுத்த பட அறிவிப்பு

Thiruchitrambalam movie director Mithran R Jawahar next with madhavan

தனுஷின் 'யாரடி நீ மோகினி' படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர். தொடர்ந்து தனுஷை வைத்து 'குட்டி', 'உத்தமபுத்திரன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய பின்னர், 'மீண்டும் ஒரு காதல் கதை' என்ற தலைப்பில் ஒரு மலையாள படத்தை ரீமேக் செய்தார். அதனைத்தொடர்ந்து 'மதில்' என்ற படத்தை எடுத்த இவர் பின்பு தனுஷை வைத்து நான்காவது முறையாக 'திருச்சிற்றம்பலம்' படத்தினைஇயக்கினார்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்றது. குறிப்பாக நித்யா மேனன் நடித்த ஷோபனா கதாபாத்திரம் பலரது பாராட்டைப் பெற்றது.

இந்த நிலையில், 'திருச்சிற்றம்பலம்' என்ற ஹிட் படத்தை தொடர்ந்து அவர் அடுத்து இயக்கவுள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் மாதவன் ஹீரோவாக நடிக்க மீடியாஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

Madhavan Mithran R Jawahar
இதையும் படியுங்கள்
Subscribe