Advertisment

'கனா' எனக்கு மிகப்பெரிய சவால்' - இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் 

dibhu

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'கனா' வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன், இளவரசு, முனிஷ்காந்த் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசையால் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் திபு நினன் தாமஸ். அருமையான 'வாயாடி பெத்த புள்ள' பாடல் 70 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இதுகுறித்து இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் பேசுகையில்...

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

"எங்களின் முதல் யோசனை, படத்தின் கதைக்கு அப்பால் அனைத்து தரப்பினரையும் கவரும் ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்பது தான். இது ஒன்றும் யாரும் சிந்திக்காத ஒரு யோசனை கிடையாது. கடந்த காலங்களில் சில ஊக்க பாடல்கள் வந்திருக்கின்றன, அந்த படத்தின் தலைப்புகள் மறந்து போன பின்னரும் கூட அத்தகைய பாடல்கள் எல்லோருடைய மனதிலும் தொடர்ந்து நிலைத்திருக்கின்றன. அந்த மாதிரி ஒரு பாடலை கொண்டு வர விரும்பினோம். 'ஊஞ்சலா ஊஞ்சலா' மற்றும் 'சவால்' ஆகிய பாடல்கள் அருண்ராஜா காமராஜின் சிந்தனையில் உதித்தவை. 'ஊஞ்சலா ஊஞ்சலா' பாடல் ஒவ்வொருவரும் உணர்ச்சிபூர்வமாக தங்களுடன் தொடர்பு கொள்ளும் பாடலாக இருக்கும்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

முழு படத்தின் ஆன்மாவாக குறிப்பிட ஒரு பாடலை உருவாக்க நாங்கள் விரும்பினோம், அது நடந்தது. சித் ஸ்ரீராம் மற்றும் நிரஞ்சனா ரமணன் ஆகியோர் தங்கள் குரலால் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பாடல்களை பாடிக் கொடுக்க ஏதுவாக இருந்தனர். மாயாஜாலம் நிகழ்ந்தது. சவால் பாடலுக்கு கிடைக்கும் அனைத்து பாராட்டுக்களும் பாடலாசிரியர் மோகன்ராஜாவின் பாடல் வரிகளையே சாரும். கூடுதலாக, அருண்ராஜாவின் ராப் பாடல் வரிகள் பாடலை மேலும் அலங்கரித்தன. எல்லாவற்றிற்கும் மேலாக, ராபிட் மேக் உடன் இணைந்து அருண்ராஜா பாடியிருக்கும் ராப் பகுதி தான் ரசிகர்கள் அனைவரையும் ரசிக்க வைக்கும், மாயாஜாலத்தை உண்டாக்கியிருக்கிறது. மேலும் இப்படத்தில் பின்னணி இசை எனக்கு மிகப்பெரிய சவால், என்னுடைய எல்லைகளை தாண்டி மிகச்சிறந்த இசையை வழங்க வேண்டி இருக்கிறது. பின்னணி இசை இல்லாமல் காட்சிகளை பார்ப்பதே மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது" என்றார்.

kanaa sivakarthikeyan aishwaryarajesh arunrajakamaraja taamilcinemaupdates
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe