Thiagarajan explain prasanth insult ajith photo

Advertisment

தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு போன்ற மூன்று துறைகளில் பயணித்தவர் 'தியாகராஜன்'. 80-களில் இவர் படத்திற்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்தன. இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்'நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் மகன் பிரசாந்த் குறித்து பல சுவாரஸ்யமானதகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில் பல வருடங்களுக்கு முன்பு பிரசாந்த் மற்றும் அஜித் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பலரும் தற்போது வரை பகிர்ந்து அந்த சந்திப்பில் பிரசாந்தின் முன்னிலையில் அஜித் அவமானப்படுத்தப்பட்டதாகவும், அதனால் அஜித் தலை குனிந்து நின்றதாகவும் கூறி வருகின்றனர். இதன் உண்மைத் தன்மைஎன்னவென்றகேள்விக்கு பதிலளித்த தியாகராஜன், "ஆண்டுதோறும் பிரசாந்தின் பிறந்தநாளை பெருசா கொண்டாடுவோம். அதில் ஒரு வருட பிறந்தநாள் விழாவிற்கு அஜித் வந்திருக்கலாம், அப்போது இருந்த காலகட்டத்தில் பிரசாந்த்திற்கு மாலை அணிவித்திருக்கலாம். அப்போது நடிகர் அஜித் பக்கத்தில் நின்றிருந்தார். அவர் தலை குனிந்து எல்லாம் நிற்கவில்லை, சொல்லப் போனால் அவர் தலை குனிய வேண்டிய அவசியம் இல்லை. அவர் தல" என்று பதிலளித்தார்.