Advertisment

“அதைப் பற்றி யோசிக்காத நாள் இல்லை” - மனவருத்தத்தில் தியாகராஜன்! 

thiagarajan speech at andhagan success meet

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது அப்பா தியாகராஜன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் பிரசாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘அந்தகன்’. இப்படத்தில் சிம்ரன், யோகிபாபு, பிரியா ஆனந்த், கே.எஸ்.ரவிக்குமார், சமுத்திரக்கனி, ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு வழங்க, உலகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படம் இந்தியில் வெளியாகி தேசிய விருது பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக்காகும்.

Advertisment

அந்தகன் படத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து, படக்குழ வெற்றிவிழா நடத்தியது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய கே.எஸ்.ரவிக்குமார், “படப்பிடிப்பின் போது நான் தியாகராஜனிடம் பிரசாந்துக்கு எப்போது கல்யாணம்? என்று கேட்டேன். அதற்கு அவர், இந்த படம் வெற்றியடைந்தால் சொல்கிறேன்’ என்றார். அதனால் இப்போது அவர் அதைப்பற்றி பேசுவார்” என மேடையிலேயே தியாகராஜனை அழைத்தார்.

Advertisment

அதைத் தொடர்ந்து தியாகராஜன் பேசுகையில், “எனக்கு மிகவும் மனவருத்தமான விஷயம் என்னவென்றால் பிரசாந்த்துடைய திருமண வாழ்க்கைதான். அவர் அம்மாவும், நானும் அதைப் பற்றி யோசிக்காத நேரமும் இல்லை நாளும் இல்லை. உண்மையிலேயே பிரசாந்துக்கு அவர் அம்மா திருமண வரனுக்காக நல்ல அழகான பெண்ணை தேடி வருகிறார். இந்த படத்திற்குப் பிறகு, பட வேலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு வெகு விரைவில் என் மகனுக்கு ஒரு பெண்ணை தேடி கல்யாணம் பண்ணிவைப்பதுதான் என் வேலை. இதை ஞாபகப்படுத்திய கே.எஸ்.ரவிக்குமாருக்கு மிகவும் நன்றி. கண்டிப்பாக கல்யாணம் நடக்கும்” என்றார்.

பிரசாந்துக்கும் கிரகலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு இருவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு விவாகரத்தானது குறிப்பிடத்தக்கது.

andhagan Prashanth Thiagarajan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe