Advertisment

"முன்னாடியே ரிலீஸ் டேட்ட டிசைட் பண்றது இவங்க மட்டும் தான்..."- நடிகர் விஷ்ணு விஷால் வேதனை

publive-image

'கட்டா குஸ்தி' திரைப்படத்தின் நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் நேற்று (23/11/2022) கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisment

அப்போது விஷ்ணு விஷால் கூறியதாவது, "சினிமால ரிலீஸ் டேட் கிடைக்கிறது ரொம்ப சேலஞ்ச். மூன்று மாசத்துக்கு முன்னாடி ரிலீஸ் டேட் இதுதான் அப்படினு டிசைட் பண்றது டாப் ஹீரோஸ் மட்டும் தான். இல்லைனா, கரெக்ட்டான ரிலீஸ் டேட்டுக்கு வெய்ட் பண்ண வேண்டியதா இருக்கு. யாராவது ஒரு பெரிய படமோ, எதாவது ஒரு பெரிய ஹீரோ படம் தள்ளிப்போகும். அப்பதான் நமக்கு அந்த இடம் கிடைக்கும். அது எங்களுக்கு மூணு அல்லது நாளு வாரம் முன்னாடி தான் தெரியும்.

Advertisment

அப்ப தான் ப்ரமோஷன்ஸ ஸ்டார்ட் பண்ண முடியும். தனுஷ் சாருடைய வாத்தி படம் வரதா இருந்தது. சரி, பிப்ரவரில பண்ணிக்கலாம்னு பிளான் பண்ணேன். அப்புறம், வாத்தி ரிலீஸ் தள்ளிப்போகுதுனு கேள்விப்பட்ட உடனே நாங்க பிளான் பண்ணோம். எங்களுக்கு கிடைச்ச டைம் மூணு வாரம். இந்த மூணு வாரத்துக்குள்ள எங்களால என்னலாம்பண்ணிஇந்தப் படத்த மக்கள் கிட்ட சேர்க்க முடியுமோ, நாங்க எங்களோட பெஸ்ட்ட பண்றோம்.

நாம இந்திய சினிமாவா ஒரு பக்கம் மாறிட்டு இருக்கோம். ஒரு பக்கம் ஏன் இந்த மாதிரி இடைஞ்சல வெக்கறாங்கனு தெரியல. புஷ்பா தமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சு 10 கோடிக்கு மேல வசூல்பண்ணிருக்கு. அப்ப நாம தெலுங்கு படம் ஸ்டாப் பண்ணணும்னு நினைக்கவே இல்லையே. ஆனா, ஏன் இந்த மாதிரி வருதுன்னு எனக்கு தெரில. இதுக்கு பின்னாடி எதோ அரசியல் இருக்கலாம். அந்த அரசியல் என்னனுஎனக்கு தெரியல. தெரியாம நான் கமெண்ட் பண்ணக் கூடாது. பயம் யாருக்கும் இல்லை சார். அவங்களும் பெரிய படம் கொடுக்கறாங்க.

நம்மளால கொடுக்க முடியுமான்னு கேள்வி இருந்தது. அப்ப நாம தொடர்ந்து கொடுத்துட்டோம் இப்பகன்னடா கொடுத்தது; தெலுங்கு கொடுத்தது. நம்ம சைடுல இருந்து இன்னும் வரலனு வெயிட் பண்ணிட்டு இருந்தோம். இப்ப நாம் எல்லாரும் கான்பிடன்ஸ் ஆகிட்டோம். அதுக்கு பின்னாடி உள்ள அரசியல் எனக்கு தெரியாது. அது என்ன நோக்கங்கிறது எனக்கு தெரியாது. பட் அது இருக்கக் கூடாதுனு நான் நம்பறேன். நாம எல்லாரையும் வெல்கம் பண்ணி , அவங்க படத்த டப் பண்ணி இங்க ரிலீஸ் பண்றோம். அதேபோல், மத்தவங்களும் நம்ம படத்துக்கு ரெஸ்ட்ரிக்ஸன் போடக் கூடாது. இது தான் என்னோட கருத்து.

எல்லாத்துலயும் அரசியல் இருக்கு சார். நான் சினிமால வரும் போது ரீல் இருந்தது. அப்ப நான் ஒரு படம் தான் பண்ணேன். ரீல்ல நடிக்கும் போது பயங்கர பிரஷர் இருக்கும்; பயம் இருக்கும். ஏன்னா அது ஓட ஆரம்பிச்சதுனு வைங்க, நீங்க சரியா பண்ணுலனா எல்லாருட்டையும் திட்டு வாங்குவீங்க. புரொடியூசர் காது வரைக்கும் போயிரும். ஏம்ப்பா, அவன் ரீல் சாப்டறான்பா. ரீலுங்கறது காசு. அது வந்து டிஜிட்டலா மாறிடுச்சு. எல்லாரும் சினிமா எடுக்க ஆரமிச்சிட்டாங்க. ஒருவர்கிட்ட 10 வருசம் அசிஸ்டெண்ட்டா இருக்கணும்கறது அவசியம் இல்லாம போச்சு.

ஷார்ட் ஃபிலிம் பண்றவங்க டைரக்டர் ஆக ஆரமிச்சிட்டாங்க. இப்ப திரும்ப சினிமா மாறுது. அந்த மாற்றம் வந்துட்டே தான் இருக்கும். நாம எப்படி அடாப்ட் பண்ணி போறோங்கறது தான் நம்ம கையில இருக்கு. இன்னும் நிறைய தியேட்டர்ஸ்க்கு உண்டான பிசினஸ் இருக்கு. அதனால தான் நிறைய புது தியேட்டர் ஆரம்பிக்கிறாங்க. ஏகப்பட்ட புது தியேட்டர்ஸ் ஆரம்பிக்கிறாங்க. காரணம் என்னனா மக்கள் இன்னும் தியேட்டருக்கு வந்து பாக்கறாங்க". இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

actor vishnu vishal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe