Skip to main content

"இந்தக் கதைகள் மீண்டும் மீண்டும் திரையில் பேசப்பட வேண்டும்" - தொல். திருமாவளவன் எம்.பி. பேச்சு

Published on 29/10/2022 | Edited on 29/10/2022

 

"These stories should be told again and again on the screen"- Thol. Thirumavalavan MP. Speech!

 

புத்தா பிலிம்ஸ் சார்பில் நேசம் முரளி தயாரித்து, இயக்கி புதுமுகங்களின் நடிப்பில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளை மையமாக வைத்து சமூக அக்கறை கொண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “பொள்ளாச்சி”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் இயக்குநரும், பெஃப்சி சம்மேளன தலைவருமான ஆர்.கே.செல்வமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

பின்னர் விழாவில் பேசிய தொல்.திருமாவளவன் எம்.பி., "ஒரு திரைப்படம் என்ன பேசுகிறது என்பதை போல் அந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறுகிறதா என்பது இப்போது முக்கியமாகிறது. இந்தக் காலத்தில் சம உரிமை பற்றி, ஜாதி பற்றி பேசுவது அதிகரித்துள்ளது. ஆனால் பெண்கள் மீதான வன்முறை இன்றும் பேசப்படுவதில்லை. ஒரு பெண் என்ன உடை உடுத்த வேண்டும் என்பதில் ஆரம்பித்து, அவள் படிப்பு அவள் குழந்தை பெற்றுக்கொள்வது வரை அவளது குடும்பமே தீர்மானிக்கிறது. 

 

அந்த வகையில் இந்தியக் கலாச்சாரமே பெண்கள் அடங்கி நடக்கவே பழக்குகிறது. ஒவ்வொரு வீடுமே பெண்களுக்கு பொள்ளாச்சி தான். ஆனால் பொள்ளாச்சி பாலியல் வன்முறை பொதுவெளியில் வந்ததால் அதன் மீது வெளிச்சம் விழுந்துள்ளது. இந்தக் கதைகள் மீண்டும் மீண்டும் திரையில் பேசப்பட வேண்டும். இந்தக் கதையினை எடுத்திருக்கும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள் படம் வெற்றி பெற வாழ்த்துகள்" தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொல். திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
it dept raided the house where Thirumavalavan was staying

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களைத் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் விதிமீறல்களையும் தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் விசிக வேட்பாளருமான தொல். திருமாவளவன் எம்.பி. தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில் பணம், பரிசுப் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் எதுவும் கிடைக்காததால் வருமான வரித்துறை அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இது குறித்து திருமாவளவன் கூறுகையில், “எந்த முகாந்திரமும் இல்லாமல் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்துவது ஒரு மறைமுகமான அச்சுறுத்தல்” என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருமாவளவன் சிதம்பரத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு வந்தபோது விசிக நிர்வாகி முருகானந்தம் என்பவர் வீட்டில் திருமாவளவன் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்? - தொல். திருமாவளவன் எம்.பி. கேள்வி

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Thol.Thirumavalavan says Does the Governor say that others who do not wear Poonul are disgraceful?

 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் நந்தனார் குருபூஜை விழா இன்று நடைபெற்றது. இதற்காக நேற்று இரவு கடலூர் வந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். இந்த குருபூஜை விழா முடிந்த பிறகு, 100 பட்டியலினத்தவர்களுக்குப் பூணூல் அணியும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். 

 

அதில் பேசிய அவர், “தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், குற்றச் செயல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும், தமிழகத்தில் அதிகபட்சமான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதே இல்லை” என்று பேசியிருந்தார். 

 

இதற்கிடையில், 100 பட்டியலினத்தவர்களுக்குப் பூணூல் அணிவிப்பது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் அவர், “நந்தனார் பிறந்த ஊர் ஆதனூரில் 100 பட்டியலினத்தவர்களுக்குப் பூணூல் அணிவிக்கிறாராம் ஆளுநர் சனாதனி ஆர்.என். ரவி.  

 

இது மேன்மைப்படுத்துகிறோம் என்னும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதாகும். இதுதான் சனாதனம் ஆகும்.  இதன்மூலம் பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்? பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களை கோவில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர்? அத்துடன், ஆளுநர் நந்தன் வழிபட்டதால் நடராசர் கோவிலில் அடைக்கப்பட்டுள்ள சுவரைத் தகர்த்து வாசலைத் திறந்து விட வேண்டுகிறோம். நாடாண்ட மன்னன் நந்தனை மாடு தின்னும் புலையன் என இழிவுபடுத்தும் பெரிய புராணக் கட்டுக் கதைகளைப் புறந்தள்ளுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.