Advertisment

தனுஷுடன் இணைந்த தெருக்குரல் அறிவு... புதிய அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

therukural arivu joins dhanush starring maaran movie

இயக்குநர்கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் 'மாறன்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் என பலரும் படத்தின் முக்கியகதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'மாறன்' படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன்இருவரும் பத்திரிகையாளராக நடித்துவருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில்,படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது.

Advertisment

இந்நிலையில், 'மாறன்' படத்தின் பாடல் குறித்தஅப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதில்," மாறன் படத்தின் ஓப்பனிங் பாடலுக்கானபணிகள் நடைபெற்று வருகிறது. பாடலாசிரியர் விவேக் வரிகளில்நடிகர் தனுஷுடன்இணைந்து தெருக்குரல் அறிவு பாடியுள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

GV prakash therukural arivu actor dhanush maaran movie
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe