Advertisment

"ரெண்டு மூனு எதிர்பாராத விஷயங்கள் இருக்கு... ஆனா அத நாங்க..." - நடிகர் விஷ்ணு விஷால் பேட்டி

publive-image

Advertisment

'கட்டா குஸ்தி' திரைப்படத்தின் நடிகரும், திரைப்படத்தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் நேற்று (23/11/2022) கோவையில்செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது விஷ்ணு விஷால் கூறியதாவது, "எல்லாருக்கும் வணக்கம், 'கட்டா குஸ்தி' திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகப் போகிறது. ரொம்ப ஹாப்பியா இருக்கோம். ஏன்னா ரொம்ப நாளுக்கு அப்புறம்தியேட்டர்ல நல்ல ஹியூமர் கலந்து ஃபேமிலி எண்டர்டெயினர் வருது. நிறைய படங்கள் சமீபத்துல ஆக்சன், த்ரில்லர் இந்த ஜானர்ல தான் வருது. ஃபேமிலி ஆடியன்ஸுக்கு இது கரெக்ட்டான படமாக இருக்கும்னு நாங்க நம்புறோம்.

உதயநிதி சார்ரிலீஸ் பண்றாரு. ரவி தேவா சார் மற்றும் நானும் புரொடியூஸ் பண்ணிருக்கோம். என் கரியர்ல ஜாலியான ஒரு நல்ல படமா இருக்கும்னு நான் நம்பறேன். இதுக்குமுன்னாடி எஃப்ஐஆர் பெரிய ஹிட் ஆச்சு. எஃப்ஐஆர் இந்த வருஷம் பிப்ரவரில ரிலீஸ் ஆச்சு. அதுக்கு அப்புறம் வர படம். எஃப்ஐஆர் மாதிரி இந்தப் படத்திற்கும் ஒரு பெரிய ரிஸப்சன் கிடைக்கும்னு ரொம்ப ஸ்ட்ராங்காநம்பறேன். படத்தின் ஹீரோயின் எல்லாத்துக்கும் நல்லா தெரியும்.

Advertisment

நார்த்ல பாலிவுட் படங்களோடநம்ம ஊரு படங்கள் ஓட ஆரம்மிச்சிடிச்சு. பொன்னியின் செல்வனா இருக்கட்டும்;இல்ல, புஷ்பா இருக்கட்டும்;கே.ஜி.எஃப் ஆக இருக்கட்டும்.சினிமாவே மாறுது. காரணம், ஆடியன்ஸ் மாறறாங்க. உங்களுக்கு கண்டென்ட் தேவைப்படுது. இந்தத்தருணத்துல கண்டென்ட்டுக்கு மரியாதை இருக்கு சார்.

யாருலாம் நல்ல கண்டென்ட் வச்சிருக்காங்களோ, அவங்களுக்கு ஜெயிக்கிறதுக்கு உண்டான நிறைய சான்சஸ் இருக்கு. எக்ஸாம்பிள்ஸ் இப்ப 'லவ் டுடே' படம் வந்தது. ரிலீஸுக்கு முன்னாடி யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க. பட் ரிலீஸுக்கு அப்புறம் ஒரு கலக்கு கலக்கிடிச்சி. என்னன்னா, அந்தப் படங்கள் ஓடும் போது நிறைய பேருக்கு நம்பிக்கை வந்திருச்சு. எங்க படத்துல எங்க நம்பிக்கை என்னன்னா, இது ஜாலியான கமர்ஷியல் படமா இருந்தாலும், உள்ளுக்குள்ள சின்ன கண்டென்ட் இருக்கு. அத நாங்க ட்ரைலர்ல காமிக்கல.

இரண்டு மூன்று சர்ப்ரைஸான விஷயங்கள் இருக்கு. படம் ஸ்டார்ட் ஆகும் போதுஅந்த சர்ப்ரைஸ் உங்களுக்கு ஓபன் ஆகும். 'Husband And Wife'- க்கு உள்ள ரிலேஷன்ஷிப் பத்தி பேசற படம் இது. பயங்கரமான ஈகோ வார்-ஆ இருக்கும். 'கட்டா குஸ்தி' டைட்டில் வைச்ச காரணம், குஸ்திங்கறதுனால கிடையாது. படத்துல புருஷன், பொண்டாடிக்கு நடுவுல நடக்குகிற ஈகோ குஸ்தி தான் இந்தப் படம். ஒரு அழகான லவ் ஸ்டோரி இருக்கு. நிறையா எமோஷன்ஸ் இருக்கு. ஃபேமிலி வேல்யூஸ் இருக்கு.

நாங்க ரொம்ப கான்ஃபிடன்டாஇருக்கோம். நான் சொன்ன மாதிரி, இந்த மாதிரி சினிமா வந்து கொஞ்ச நாள் ஆச்சு. ரொம்ப சீரியஸா;இல்ல, வார் மூவி;அப்படி தான் வருது. இது எல்லாரும் வந்து பாப்பாங்க.ஃபேமிலிஸோட. அதனால நாங்க நம்புறோம்.கண்டென்ட்டுக்கு மரியாதை இருக்கு. நம்ம படத்துல சின்னதா கண்டென்ட் இருக்கு." என்றார்.

aishwarya lekshmi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe