அப்போ சிவாஜி, கமல்.... இப்போ ஜெயம் ரவி...

தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஒன்பது வேடங்களில் நடித்தவர் சிவாஜி கணேஷன். நவராத்திரி என்னும் படத்தின் மூலம் நடிகர் திலகம் நடித்திருப்பார். அவரை தொடர்ந்து ‘தசாவதாரம்’ படத்தில் 10 வேடங்களில் நடித்து கமல்ஹாசன், புதிய சாதனையை ஏற்படுத்தினார்.

jayam ravi

இவ்விருவரையும் அடுத்து தமிழ் சினிமாவில் அதிக வேடங்களில் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார். ரவி தற்போது கோமாளி என்றொரு படத்தில் நடித்து வருகிறார். இதில்தான் சுமார் 9 வேடங்களில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஜெயம் ரவியுடன் முதன் முறையாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

alt="devarattam" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="013aef10-acc0-42bf-b496-8b5961ee652f" height="230" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336-x-150-devarattam_0.png" width="471" />

இதில் ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் உள்பட 9 வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கிறாராம்.

jayam ravi
இதையும் படியுங்கள்
Subscribe