The theme song of the Heartbeat series was released

Advertisment

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸுக்கு ஹார்ட் பீட் என்று பெயரிட்டுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியீடாக, சமீபத்தில் வெளியிடப்பட்டஹாட்ஸ்டார் ஸ்பெஷல்களான ‘மத்தகம் மற்றும் லேபிள்’சீரிஸ்கள், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில்நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், தற்போதைய புதிய சீரிஸாக 'ஹார்ட் பீட்' சீரிஸை அறிவித்துள்ளது. இந்த சீரிஸின் டைட்டிலை ஒரு சிறிய வீடியோவில், டைட்டில் தொடரின் பெயர் மற்றும் 'ரிதம் ஆஃப் லைஃப்' எனும் டேக் லைனுடன் வெளியிட்டுள்ளது. இந்த சீரிஸ் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அடுத்ததாக வெளியிடவுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘ஹார்ட் பீட்’சீரிஸிலிருந்து ‘ஹார்ட் பீட் பாட்டு’எனும் பெப்பியான பாடலை வெளியிட்டுள்ளது. சூப்பர் சுப்பு எழுத்தில், மேட்லி ப்ளூஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடல், 'ஹார்ட் பீட்' சீரிஸின் சாரத்தையும் அதன் ஆன்மாவையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.