/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/162_44.jpg)
புஷ்பா பட வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமாக கடந்த 5ஆம், தேதி வெளியாகியிருக்கும் படம் புஷ்பா 2 - தி ரூல். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ஆறு நாட்களில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த நாட்களில் ஆயிரம் கோடி வசூலித்த முதல் இந்தியப் படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றுள்ளது.
இதனிடையே இந்தப் படம் தொடர்பாக தொடர்ந்து அதிர்ச்சிக்குரிய சம்பவம் நடந்து வருகிறது. ஹைதராபாத்திலுள்ள ஒரு திரையரங்கில் சிறப்பு காட்சி திரையிடப்பட்ட போது, அங்கு அல்லு அர்ஜூன் சென்ற நிலையில் அவரை காண ஏகப்பட்ட கூட்டம் சூழ்ந்ததால் அதில் சிக்கி ரேவதி(39) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ஆந்திராவில் ஒரு திரையரங்கில் படம் பார்த்து கொண்டிருந்த போதே 35 வயதுள்ள மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்திருந்தார்.
இதன் வரிசையில் மற்றொரு சம்பவம் புஷ்பா 2 திரையிடப்பட்ட தியேட்டரில் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேசம் குவாலியர் நகரத்தில் ஷபிர் என்ற நபர் புஷ்பா 2 படம் பார்க்க திரையரங்கு சென்றிருக்கிறார். அப்போது இடைவெளியில் ஸ்நாக்ஸ் வாங்க கேண்டீனுக்கு சென்றுள்ளார். அவர் ஸ்நாக்ஸ் வாங்கிவிட்டு பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கேண்டீன் ஓனர் அவரிடம் கேட்க பின்பு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் முற்றி கைகலப்பு வரை சென்றுள்ளது. அப்போது கேண்டீன் உரிமையாளர் ஷபீரின் ஒரு பக்க காதை கடித்துள்ளார். இதையடுத்து ஷபீர் காவலி நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)