Skip to main content

தியேட்டர் ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்டது 

Published on 23/03/2018 | Edited on 24/03/2018
theater


திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்கவும், மேலும் 8 சதவீத கேளிக்கை வரி, பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்து  கடந்த 1ஆம் தேதி முதல் பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து 16-ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கியது. இந்நிலையில், நேற்று மாலை திரையரங்கு உரிமையாளர்கள், தமிழக அரசு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அரசு அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளதால் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் இயங்கும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்துக்கு தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்பு..! 

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

ஆன்லைன் மூலம் டிக்கெட் கட்டணங்களை வெளிப்படையாக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் நீண்ட நாட்களாக வற்புறுத்தி வந்த நிலையில் செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தற்போது இதற்கு செவி சாய்த்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் கூறியபோது...
 

theaters


"தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் ஒரு நாளில் எத்தனை காட்சிகளில் எத்தனை டிக்கெட்டுகள் விற்கப்பட்டு உள்ளன என்பதை கண்காணிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய பரிசீலிக்கப்பட்டு வருகிறது. முதலில் சென்னை போன்ற பெருநகரங்களில் ஆன்லைன் டிக்கெட் விற்பனை நடைமுறைக்கு வரும்” என்றார். இந்நிலையில் இதற்கு தியேட்டர் அதிபர்கள் இதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசும்போது....
 

zombi


"தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் 15 முதல் 20 சதவீதம் டிக்கெட்டுகள்தான் ஆன்லைனில் விற்பனையாகிறது. மீதி 80 சதவீத டிக்கெட்டுகளை நேரில் வந்துதான் வாங்குகிறார்கள். அரசு கொண்டு வந்துள்ள நடைமுறையை ஆதரிக்கிறோம். அதே நேரம் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்க வேண்டும் என்பது சிரமமான காரியம். ஆன்லைன் என்றால் வங்கிக்கும். ஆன்லைன் கம்பெனிக்கும் ஒரு தொகையை மக்கள் கட்ட வேண்டி உள்ளது. பெரிய நகரங்களுக்கு இது சாத்தியம். நேரடியாக வாங்கும் டிக்கெட்டுகளுக்கு அரசே ஒரு சர்வர் ஏற்படுத்தினால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் கண்காணிக்க முடியும்.

 

 

ஆன்லைன் டிக்கெட் விற்பனை சிரமங்களை அமைச்சரிடம் நேரில் சந்தித்து எடுத்துச் சொல்வோம். இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு நகராட்சி வரி 8 சதவீதம் விதிக்கப்பட்டு இருப்பதால் எங்களால் தொழில் செய்ய முடியவில்லை. அதை நீக்க வேண்டும். 4 ஆயிரமாக இருந்த தியேட்டர்கள் எண்ணிக்கை 834 ஆக குறைந்து விட்டது. ஒரு தியேட்டரை 3 அல்லது 4 தியேட்டராக மாற்ற அனுமதி கேட்டு மனுகொடுத்து உள்ளோம். அதை ஏற்றால் 4 ஆயிரம் தியேட்டர்களாக மாறும். அரசுக்கும் வருமானம் கிடைக்கும்'' என்றார். மேலும் இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் பேசும்போது.... "ஆன்லைன் டிக்கெட் விற்பனைக்கு குறிப்பிட்ட கம்பெனியோடு ஏற்கனவே ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருப்பதால் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அமைச்சரை நேரில் சந்தித்து இதை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்” என்றார்.

 

Next Story

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு புதிய சங்கம் !

Published on 24/12/2018 | Edited on 24/12/2018
theater

 

தமிழ் நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் துவக்க விழாவானது, சென்னை இராமபுரத்தில் நடைபெற்றது. தமிழ் நாட்டில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கிற திரையரங்குகள் மற்றும் புதிதாக தோன்றியுள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை இணைத்து ஒரு புதிய சங்கமாக தோற்றுவிக்கப்பட்டது. இவ்விழாவில் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் புரவலர் திரு. அபிராமி இராமநாதன் தலைமை தாங்கினார், தமிழக அரசின் மாண்புமிகு. உயர்கல்வித்துறை அமைச்சர் திரு கே பி அன்பழகன் அவர்களும், மாண்புமிகு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜீ அவர்களும் குத்துவிளக்கேற்றி சங்கத்தை துவக்கி வைத்தனர். 

 

 

 

சங்கத் தலைவராக திருப்பூர் சுப்ரமணியம் அவர்களும் , சங்க பொது செயலாளராக திரு ஆர்.பன்னீர் செல்வம்அவர்களும் பொருளாளராக திரு.டி.சி.இளங்கோவன் அவர்களும் மற்றும் பல நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். விழாவில் திரையரங்க தொழில் வளர்ச்சியடையும் வகையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் , வழங்க உள்ள சலுகைகளையும் பற்றி அறிவித்து அமைச்சர்கள் சிறப்புரையாற்றினார்கள். இவ்விழாவில் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நலிவடைந்த திரையரங்க தொழிலை மேம்படுத்தும் வகையில் ஆணை வழங்கியதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உயர்திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள மற்ற கோரிக்கைகளையும் விரைவாக பரிசீலனை செய்து ஆணை வழங்கிடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. விழாவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதி திரையரங்குகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.