Advertisment

நீண்டு கொண்டே போகும் ஸ்ட்ரைக்...தீர்வு காண பட அதிபர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை  

theater

திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 1ஆம் தேதி முதல் பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும் என்றும் பெரிய படங்களுக்கு அதிக கட்டணமும் சிறிய படங்களுக்கு குறைவான கட்டணமும் வசூலிக்க வேண்டும் என்றும் பட அதிபர்கள் வற்புறுத்தி உள்ளனர். மேலும் பார்க்கிங் கட்டணத்தையும் கேன்டீன்களில் விற்கப்படும் உணவு பண்டங்கள் விலையை குறைக்கவும் வலியுறுத்தி 16-ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கியது. நடிகர், நடிகைகள் வீட்டில் முடங்கி உள்ளனர். பெப்சி தொழிலாளர்களும் வேலை இழந்து இருக்கிறார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை பட அதிபர்கள் நேரில் சந்தித்து வேலை நிறுத்தம் குறித்து விளக்கி உள்ளனர். மேலும் டைரக்டர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், பெப்சி, ஒளிப்பதிவாளர்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். இந்நிலையில் இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு கான தற்போது தயாரிப்பாளர்கள் கோரிக்கைகள் குறித்து தியேட்டர் அதிபர்கள் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மேலும் பட அதிபர்களும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஓரிரு நாளில் மீண்டும் சந்தித்து பேச மீண்டும் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு வேலை நிறுத்தம் கைவிடப்படும் என்று மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Advertisment
tamilcinemaupdate theaterstrike
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe