/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/186_12.jpg)
லோகேஷ் கனகராஜ் வழங்க 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' நிறுவனம் தயாரிப்பில் கடந்த மாதம் 3 ஆம் தேதி வெளியான படம் 'மைக்கேல்'. இப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. இந்த விமர்சனங்களுக்கு இப்படத்தின் இயக்குநர் "அனைவரையும் திருப்திப்படுத்தக் கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை. ஒவ்வொருவருக்கும் ரசனையும் மாறும்" என விளக்கமளித்திருந்தார்.
இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரின் அடுத்த படத்திற்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக திரையரங்கில் வெளியான படம் 4 வாரங்கள் முடிந்த பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டை மீறி மைக்கேல் படம் 3 வாரங்களுக்கு பிறகு ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)