விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில், கழுகு இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”. இத்திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது….
படம் ஆரம்பிக்கும் முன்னாடி சத்ய சிவா ஒரு லைன் சொன்னார், ஆனால் அவரை விட தயாரிப்பாளர் பாண்டியன் சிறப்பாகப் படத்தோடு இன்வால்வ் ஆகி கதை சொன்னார். படம் முழுக்க அவரிடம் மிகப்பெரிய உற்சாகம் இருந்தது. படத்தில் எல்லோரும் கடினமாக உழைத்துள்ளனர். படம் அடுத்த வாரம் வருகிறது, ரொம்ப நம்பிக்கையாக இருக்கிறோம். சத்ய சிவா என்னிடம் மிக எளிமையாகப் பழகினார், அவருக்கு என்ன வேண்டும் என்பதைக்கூட அமைதியாகத்தான் சொல்வார். படத்தை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார். சசிகுமார் உடன் தொடர்ந்து வேலை பார்ப்பது மகிழ்ச்சி. எல்லோரும் இப்படத்தில் நன்றாக நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள் முழு உழைப்பைத் தந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/06/jipran-2025-07-06-13-56-29.jpg)