அறிமுக இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம் இயக்கத்தில் எஃப்.ஜே. நடிப்பில் உருவாகும் படம் ‘தி பிளாக் பைபிள்’. நடிகர் எஃப்.ஜே, சுழல் வெப் தொடரில் கவனம் பெற்றிருந்தார். இவரை தவிர்த்து இப்படத்தில் சாந்தினி தமிழரசன், ஸ்ரீஜா ரவி, மோனா பெத்ரா மற்றும் அய்ரா பாலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் மர்மம், நாட்டுப்புற மரபு மற்றும் பயம் நிறைந்த ஒரு கதையாக உருவாகியுள்ளது போல் தெரிகிறது. இந்தப் படத்தை ஈபிஎஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு அஸ்வின் கிருஷ்ணா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு-கேரள எல்லையில் அமைந்துள்ள அஸ்தினாபுரம் என்ற நிழல் கிராமத்தில் இந்தப் படத்தின் கதை நடக்கிறது. படத்தின் டிரெய்லர், பாடல்கள் மற்றும் உலகளவில் திரையரங்க வெளியீட்டு தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/01/21-2025-07-01-16-22-18.jpg)