விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில், கழுகு இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”. இத்திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
நடிகை லிஜோமோல் ஜோஸ் பேசியதாவது…
“நான் தமிழ்ப்படங்கள் செய்து கொண்டு தான் உள்ளேன். ஆனால் இந்தப்படத்தில் நான் இலங்கைப் பெண்ணாக நடித்துள்ளேன், நார்மல் தமிழே எனக்கு கஷ்டம், ஆனால் இதில் இலங்கைத் தமிழ் பேசி நடித்துள்ளேன், அதிலும் இயக்குநர் ஒவ்வொரு சீனுக்கும் கரெக்சன் சொல்லிக்கொண்டே இருப்பார், நன்றாகப் பார்த்துக்கொண்டார். சசிக்குமார் உடன் நடித்தது மகிழ்ச்சி. ஷூட்டிங்கின் போது எனக்கு சிக்கன் பாக்ஸ் வந்து விட்டது. அப்போது சசிக்குமார் தான் வந்து ஆதரவாகப் பேசி என்னை கவனித்து ஹாஸ்பிடல் அனுப்பி வைத்தார்என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/06/sasi3-2025-07-06-15-21-58.jpg)