'தேஜாவு' பட இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் படம் 'தருணம்'. ஸென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் படிப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு மட்டும் எஞ்சியுள்ள நிலையில், தற்போது படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர், டிரெய்லர், இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.