Skip to main content

பட்ஜெட் முக்கியமல்ல; கதை தான் முக்கியம் - தருணம் பட துவக்க விழாவில் இயக்குநர் அரவிந்த் 

 

 Tharunam Movie Launch 

 

தருணம் பட தொடக்க விழா சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் ஸ்மிருதி வெங்கட், கிஷன் தாஸ், இயக்குநர் அரவிந்த் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் மூவரும் பேசியதாவது...

 

ஸ்மிருதி வெங்கட் பேசியதாவது ”எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் அரவிந்த் அவர்களுக்கு என்னுடைய நன்றி. நான் செய்த படங்களிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. இந்தப் படத்தில் வேலை செய்த அனைவரோடும் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி. இந்தப் படம் பெரிய வெற்றி அடையும் என்று நம்புகிறேன்” என்றார். 

 

கிஷன் தாஸ் பேசியதாவது ”ஒரு பெரிய படத்தை அப்ரோச் செய்வது போல் இயக்குநர் அரவிந்த் இந்தப் படத்தை அப்ரோச் செய்தார். அதன் காரணமாகவே தொடக்க விழா இவ்வளவு சிறப்பாக நடக்கிறது. ஸ்மிருதியுடன் இதற்கு முன் ஒரு விளம்பரப் படத்தில் வேலை செய்திருக்கிறேன். நான் இந்தத் துறையில் இருப்பதற்கு தர்புகா சிவா அவர்கள் தான் காரணம். அவருக்கு என்னுடைய நன்றி. இப்படி ஒரு நல்ல படத்தில் நானும் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்றார்.

 

 Tharunam Movie Launch 

 

இயக்குநர் அரவிந்த் பேசியதாவது, “சில காரணங்களால் அஷ்வின் இந்தப் படத்தை செய்ய முடியவில்லை. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அவரோடு பணியாற்றுவேன். பான் இந்தியா படங்கள் என்பது பட்ஜெட் அடிப்படையில் மட்டுமல்ல. கதையையும் பொறுத்தது. காந்தாரா படம் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இந்தியா முழுவதும் வெற்றி பெற்றது. அதன் கதை அனைவருக்கும் கனெக்ட் ஆனது. அப்படி ஒரு படம் தான் இதுவும். மற்ற மொழிகளிலும் இந்தப் படம் வெளிவரும். பெரிய ஹீரோக்களுக்கு நான் படம் செய்வது கடினம். ஒரு குறிப்பிட்ட ஃபார்முலாவுக்குள் படம் செய்வது கஷ்டம். சரியான கதைகள் அமைந்தால் நிச்சயம் செய்யலாம். பெரிய நடிகர்களை வைத்துப் படம் இயக்கும்போது பொறுப்பு அதிகம். என்னுடைய கதைக்கு எந்த நடிகர் செட் ஆனாலும் அவர்களை வைத்து இயக்க நான் தயார்” என்றார்.

 


 

மிஸ் பண்ணிடாதீங்க