Advertisment

துணை நடிகையைக் காதலித்து ஏமாற்றிய நடிகர் கைது!

tharisu

'தரிசு நிலம்' என்ற படத்தில் கதாநாயகானக நடித்தவர் தியாகராஜன். இவர் 'நாடோடிகள்' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ஒரு துணை நடிகையைக் காதலித்து வந்துள்ளார்.

Advertisment

இந்த ஜோடி ஒன்பது வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார்கள். திருமணம் செய்துகொள்ள விருப்பப்பட்ட நடிகை தியாகராஜனிடம் அதுகுறித்து பேசியுள்ளார். ஆனால், தியாகராஜன் அவரைகாதலிப்பதாக ஏமாற்றித் தேவைப்படும்போது நகை மற்றும் பணத்தை வாங்கி செலவு செய்தது தெரியவந்துள்ளது. தியாகராஜன் நடிகையிடம் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

Advertisment

தற்போது தியாகராஜனுக்கு நிரந்தர வேலை ஒன்று கிடைத்துவிட்டதால் நடிகையுடனான காதலைத் துண்டித்திருக்கிறார். அதற்குக் காரணமாகப் பெண் தன்னைவிட ஒரு வயது மூத்தவர் என்று சொல்லியிருக்கிறார். மேலும், தொந்தரவுப்படுத்தினால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த நடிகை மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தியாகராஜன் தன்னை நிராகரித்ததுடன் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகப்புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து தியாகராஜனை கைது செய்த போலீஸார் அவரைப் புழல் சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகிறது. அவர் மீது மோசடி, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கோலிவுட்டை பரபரப்பாக்கியுள்ளது.

kollywood
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe