Advertisment

“உன் வீட்டில் அம்மா இல்லையா?”- கொச்சைப்படுத்தியவரை சாடிய நடிகை...

பிரபல மலையாள சினிமா நடிகையும், நடன கலைஞருமான தாரா கல்யாண், சமூக வலைதளத்தில் தனது புகைப்படத்தை கொச்சைப்படுத்தியவர்களுக்கு வீடியோ ஒன்று பதிவிட்டு கடுமையாக சாடியுள்ளார்.

Advertisment

thara kalyan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தாராவின் மகள் சௌபாக்யா வெங்கடேஷுக்கும் அர்ஜூன் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். தனது மகளின் திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் தாரா கல்யாணின் புகைப்படத்தை எடுத்து அதை சமூக வலைதளங்களில் கொச்சைப்படுத்தியுள்ளனர். இதனால் கோபமடைந்த தாரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வாறு பதிவிட்டவர்களை கடுமையாக சாடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “சமூக வலைதளங்களில் எனது புகைப்படம் ஒன்று வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. எனது மகளின் திருமணத்தைத் தனியாக நடத்த தைரியமில்லாததால் குருவாயூரப்பனின் கைகளைப் பிடித்துக் கொண்டு அதை நடத்தினேன். அந்த திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவின் ஒரு காட்சி புகைப்படமாக எடுக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது. அதைப் பகிர்ந்துள்ள நபருக்கு இதயம் இருக்கிறதா அல்லது வெறும் கல் தானா? உன் வீட்டில் அம்மா இல்லையா? உன்னை நான் என் வாழ்க்கையில் மன்னிக்க மாட்டேன்.

சமூக ஊடகம் நல்லதுதான். ஆனால் அதில் இது போல யாருக்கும் நடக்கக்கூடாது. ஏனென்றால் இது பலரது மனதை நோகடிக்கும். அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்த, ரசித்த, கருத்து பதிவிட்ட அனைவரையும் நான் வெறுக்கிறேன். இதைச் செய்தவர்கள் பெண்களை மதிக்க முயற்சிக்க வேண்டும். கலைஞர்கள் நாங்களும் மனிதர்கள் தான். எங்களுக்கும் உணர்வுகள் உண்டு" என்று பேசியுள்ளார்.

viral videos Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe