பிகில் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். பேட்ட புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க, வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.

Advertisment

csa

இதில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து வரும் நிலையில் இப்படத்தின் கதை கசிந்ததாக தற்போது பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. நீட் தேர்வுக்கு பலியான அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது. அரியலூர் மாணவி அனிதா பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வால் மருத்தவ படிப்பு சீட் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தை மையமாக வைத்தே தற்கால கல்வி முறையை சாடும் படமாக இப்படம் தயாராவதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.