தமிழ் சினிமாவில்எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமை கொண்ட ஆளுமை பஞ்சு அருணாச்சலத்தின் 80 வது பிறந்தநாளை முன்னிட்டு விழா அவரது பங்களிப்பை கொண்டாடும் வகையில் பஞ்சு 80 என்ற பெயரில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில் இது குறித்தபத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய தயாரிப்பாளர் தாணு, "50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் சாதனை படைத்தவர் சரித்திரம் படைத்தவர். எழுத்தால் தமிழ் சினிமாவில் எண்ணிலடங்கா வெற்றிகளை தந்தவர் பஞ்சு அருணாசலம். அவருக்காகநடைபெறும் இந்த பாராட்டு விழாவிற்கு நான் உறுதுணையாக இருப்பேன்" எனத்தெரிவித்துள்ளார்.