பிரபல தயாரிப்பாளரானகலைப்புலி எஸ்.தாணு தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்துதமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராகஇருந்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் தாணு தயாரிப்பில் வெளியான 'நானே வருவேன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சூர்யா - வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'வாடிவாசல்' படத்தைப் பிரம்மாண்டமாகத்தயாரித்து வருகிறார். இதனிடையே தயாரிப்பாளர் தாணு சினிமாவைத்தாண்டி பலருக்கு உதவி செய்தும்வருகிறார்.
அந்த வகையில்தயாரிப்பாளர் தாணு, சென்னை காவேரி மருத்துவமனையில் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் 33 வயது பெண்ணுக்கு நிதியுதவி அளித்துள்ளார். ஒற்றைத்தாயான அந்தப் பெண் கடந்த 2 வருடங்களாக நுரையீரல்பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் தாணு அந்தப் பெண்ணின் சிகிச்சைக்காக ரூ. 5 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார். இதற்கான காசோலையைச் சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் ஐயப்பன் பொன்னுசாமி மற்றும் மனநல மருத்துவர் யாமினி கண்ணப்பன் ஆகியோரிடம் தயாரிப்பாளர் தாணு வழங்கியுள்ளார்.