Skip to main content

முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு நிதியளித்த தயாரிப்பாளர் தாணு!

Published on 16/06/2021 | Edited on 16/06/2021

 

Kalaippuli S Thanu

 

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திவந்த கரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இருபதாயிரத்திற்கும் மேல் பதிவாகிவந்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும், கரோனா மூன்றாம் அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கவனமாக முன்னெடுத்துவருகின்றன. இருப்பினும், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் என தற்போதைய சூழலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசுக்குப் பெரிய அளவில் நிதித் தேவை ஏற்பட்டுள்ளது.

 

இதனை சமாளிக்கும் விதமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற அளவுக்கு நிதியுதவி அளித்துவருகின்றனர். அந்த வகையில், பிரபல தயாரிப்பாளர் தாணு முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும், நெருக்கடிகள் நிறைந்த இந்தப் பெருந்தொற்றுக் காலத்தை முதல்வர் ஸ்டாலின் சிறப்பாகக் கையாண்டு வருவதாகக் கூறி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கடவுள் பாதி மிருகம் பாதி’ - ஆளவந்தான் ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

Aalavandhaan re release update

 

கமல்ஹாசன் கதை, மற்றும் திரைக்கதை எழுதி சுரேஷ் கிருஷ்ணா இயக்கி கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ஆளவந்தான். வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.தாணு தயாரித்திருந்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் படமாக்கப்பட்டு அடுத்தடுத்த தேதிகளில் இரண்டு மொழிகளிலும் வெளியானது.

 

இப்படத்தில் இடம்பெற்ற ஸ்பெஷல் எபெக்ட்ஸ் காட்சிகள் உலக சினிமா ரசிகர்களைக் கவர்ந்தது. மேலும் பிரபல ஹாலிவுட் இயக்குநர் குவின்டின் டரான்டினோ, "ஆளவந்தான் படத்தில் வரும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் காட்சி தான் எனது 'கில் பில்' படத்தில் வரும் ஒரு சண்டை காட்சிக்கு உத்வேகமாக அமைந்தது" என தன்னிடம் கூறியதாக பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்திருந்தார். இப்படத்தின் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் பணிகளை கவனித்த மதுசூதனனுக்கு 49வது தேசிய விருது விழாவில் தேசிய விருது கொடுக்கப்பட்டது.

 

இப்படம் 22 வருடம் கழித்து ரீ ரிலீஸ் ஆகவுள்ளதாக கடந்த ஜனவரியில் தயாரிப்பாளர் தாணு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார். மேலும் புதிய டிஜிட்டல் ஒலி அமைப்பில் உலகெங்கும் ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் ரீ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. 

 

 

 

 

Next Story

'வாடிவாசல்' நிலை என்ன? - தயாரிப்பாளர் தாணு விளக்கம்

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

producer thanu explain about vaadivaasal rumour

 

சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். ’சூர்யா 42’ என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது . 

 

இதனிடையே வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகிறது. அதற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது. இதனிடையே பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் நடித்து வந்த சூர்யா, சில காரணங்களால் படத்தில் இருந்து விலகினார். 

 

இதனைத் தொடர்ந்து 'வணங்கான்' படத்தைப் போலவே 'வாடிவாசல்' படத்தில் இருந்தும் சூர்யா விலக முடிவெடுத்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியானது. மேலும் 'வாடிவாசல்' படமே கைவிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. 

 

இந்த நிலையில் 'வாடிவாசல்' படத்தின் தயாரிப்பாளர் தாணு, இது குறித்து ஒரு ஆங்கில ஊடகத்தில் பேசியுள்ளார். அவர் பேசுகையில், "சூர்யா வாடிவாசல் படத்தில் இருந்து விலகவில்லை. அவை வெறும் வதந்திதான். யாரும் அதனை நம்ப வேண்டாம். படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் மாதங்களில் அப்டேட்டுகள் வெளியாகும்" எனத் தெரிவித்துள்ளார்.