Advertisment

"தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினருக்கு நன்றி" - நடிகை ரோகிணி

publive-image

நானி மற்றும் நஸ்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அண்டி சுந்தரானிகி'. தெலுங்கில் உருவாக்கப்பட்ட இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் டப் செய்யப்பட்டு தமிழில் 'அடடே சுந்தரா' என்றும் மலையாளத்தில் 'ஆஹா சுந்தரா' என்ற தலைப்பிலும் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ரோகிணி, நதியா, அழகம் பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' தயாரிக்கும் இப்படத்திற்கு விவேக் சாகர் இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் தெலுங்கு ட்ரைலருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

Advertisment

இந்நிலையில் 'அடடே சுந்தரா' படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. நானி, நஸ்ரியா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினர். செய்தியாளர்களிடம் ரோகிணி பேசுகையில், " ‘அடடே சுந்தரா’ எனக்கு மிகவும் ஸ்பெஷலான தனித்துவமான திரைப்படம். ஆக்ஷன் படங்களில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதுபோன்ற நேரத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், உற்சாகத்துடனும் சிரித்துக்கொண்டே கண்டு ரசிக்கக் கூடிய படமாக ‘அடடே சுந்தரா’ இருக்கும். நகைச்சுவையுடன் மட்டுமல்லாமல் மனதில் தங்கும் காதல் கதையும் இதில் இருக்கிறது.

Advertisment

இந்தப்படத்தில் நடிப்பதற்கு முன் நானும், நானியும் ஏராளமான திரைப்படங்களில் தாய் -மகன் வேடங்களில் நடித்திருக்கிறோம். படப்பிடிப்பு தளத்தில் நானும், நானியும் பணியாற்றும்போது நிஜமாகவே தாயும் மகனையும் போலவே பழகுவோம். இந்தப் படத்திலும் நானிக்கு தாயாக நடித்திருந்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கென தனித்தன்மை இருக்கிறது. தொடர்ந்து வெற்றிப் படங்களில் நான் இடம்பெறுவதற்கு விவேக்போன்ற இயக்குநர்கள் தான் காரணம் என்பதையும் இங்கே நான் கூற விரும்புகிறேன். தொடர்ந்து எனக்கு நல்ல கதாபாத்திரங்களை வழங்கிவரும் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகினருக்கு நன்றி" என பேசினார்.

Rohini Adade Sundara movie
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe