Advertisment

சூர்யாவிற்கு நன்றி - சர்ப்ரைஸ் போஸ்டரை வெளியிட்ட படக்குழு

Thanks to Surya - the crew who released the Surprise poster

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இரண்டாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இதனிடையே கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்காக லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் காரும், உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி பைக்கும்சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவிற்கு ரோலக்ஸ் கடிகாரத்தையும் பரிசாக அளித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் 'விக்ரம்' படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யா 'ரோலக்ஸ்' என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். படத்தின் இறுதியில் சில நிமிடங்களிலேயே வந்தாலும், சூர்யா தோன்றும் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்காக சூர்யாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் புகைப்படத்துடன் "நன்றி ரோலக்ஸ் சார்" என குறிப்பிட்டு புதிய போஸ்டரை 'விக்ரம்' படக்குழு வெளியிட்டுள்ளது. இதுவரை ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் புகைப்படத்தை வெளியிடாத படக்குழு தற்போது சர்ப்ரைஸாக அந்த கதாபாத்திரத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

Advertisment

actor suriya vikram movie
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe