publive-image

இந்தியத் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ரஜினிகாந்த் இன்று (12.12.2022) தனது 72வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி ரஜினிகாந்த்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் தற்போது ரஜினி நடித்து வரும் 'ஜெயிலர்' படக்குழு ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்துஅவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள கடிதத்தில், பிறந்தநாள்வாழ்த்துகளைத்தெரிவித்த அனைத்து அரசியல் தலைவர்களுக்கும், திரைப் பிரபலங்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். மேலும் வாழ்த்துகளைத்தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றியைத்தெரிவித்துள்ளார்.