"நடிகர்கள் பின்னால் ஓடுவது அவலநிலை" - ஜல்லிக்கட்டு குறித்து தங்கர் பச்சான் முதல்வருக்கு கோரிக்கை

thankar bachan about jallikattu

தமிழகத்தின்பல இடங்களில் பொங்கல் திருநாளைமுன்னிட்டு ஜல்லிக்கட்டு மற்றும் எருது விடும் விழாநடைபெற்று வருகிறது. உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர்மற்றும் பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கம்போல் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாககார் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இயக்குநர் தங்கர்பச்சான் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு கார் பரிசாக வழங்குவதைவிட, உழவுத்தொழில் தொடர்பான இயந்திரங்கள் வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில், "காரின் தொகைக்கு ஈடாக அந்த வீரனுக்கு உழவுத்தொழில் தொடர்பான கருவிகள், மாடுகள், நிலம் இவற்றைத் தந்து அவருடைய வாழ்வுக்குமுன்னேற்றம் ஏற்படுத்தித் தந்தால் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியை நாம் அடையலாம்.

பரிசு தரும் காரை வைத்துக்கொண்டு (எரிபொருள்)பெட்ரோல், டீசல்விற்கும் விலையில் அதற்கு செலவழிப்பதற்காகவே அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். தயவுகூர்ந்து முதலமைச்சர் இக்கோரிக்கைகுறித்து சிந்தித்துசெயல்படுத்த வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்" என்றுகுறிப்பிட்டுள்ளார்.

மேலும், மற்றொரு பதிவில், "உயிரைப் பணயம் வைக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களின் வீரம் தான் போற்றுதற்குரிய உண்மையான வீரம். அவர்கள் தான் தமிழ்நாட்டின் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு இச்சமூகம் உரிய மதிப்பளிப்பதில்லை! இதேவேளையில் பொய்ப்புனைவு சினிமா காட்சிகளில் தோன்றுபவர்களை உண்மையான வீரனாக எண்ணி இளைஞர் சமுதாயத்தினர் சண்டையிட்டுக் கொண்டு அவர்களின்பின்னால் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.இந்த அவல நிலை என்று மாறுமோ" எனப் பதிவிட்டுள்ளார்.

cm stalin jallikattu Thankar Bachan
இதையும் படியுங்கள்
Subscribe