"நன்றி சூர்யா சார்" - ஆர்யா

publive-image

'எனிமி' படத்தைத் தொடர்ந்து தற்போது சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் 'கேப்டன்' படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. 'திங்க் ஸ்டுடியோஸ்' மற்றும் ஆர்யாவின் 'தி ஷோ பீப்பிள்' நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் 'நினைவுகள்' பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. மேலும் வருகிற செப்டம்பர் 8-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் ஆர்யா நடிப்பைத் தாண்டி சைக்கிளிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் லண்டனில் நடைபெறவுள்ள சைக்கிள் போட்டியில் ஆர்யா தனது குழுவினருடன் கலந்து கொள்கிறார். இந்நிலையில் ஆர்யா அணியின் ஜெர்ஸியை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். இதனை ஆர்யா தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்து இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். மேலும் "எங்கள் அணியின் ஜெர்சியை வெளியிட்டதற்காக சூர்யா சார் அவர்களுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Actor Arya actor suriya
இதையும் படியுங்கள்
Subscribe