Advertisment

உல்டாவான கதை - வெளியானது தனி ஒருவன் 2 அப்டேட்

.

thani oruvan 2 ipdate

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டுவெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் 'தனி ஒருவன்'. சமூக கருத்துகள் குறித்து பேசப்பட்ட இப்படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ரசிக்கப்பட்டது. குறிப்பாக வில்லன் அரவிந்த் சாமிக்கு கம் பேக் படமாக அமைந்தது.

Advertisment

இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் அவ்வப்போது விரைவில் அப்டேட் வருவதாக பேச்சுகள் இருந்து வந்தது. பின்பு கடந்த மார்ச் மாதம், ஒரு நிகழ்ச்சியில் பேசிய மோகன் ராஜா, "தனி ஒருவன் 2 இந்த வருடம் இல்லை. அடுத்த வருடம் கண்டிப்பாக இருக்கும்" என்றார்.

Advertisment

இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 8 வருடம் கடந்துள்ள நிலையில் தனி ஒருவன் 2 குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி முதல் பாகத்தை தயாரித்த ஏ.ஜி எஸ் நிறுவனமே தயாரிக்கிறது. மீண்டும் மோகன் ராஜா, ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா கூட்டணி இதில் கை கோர்த்துள்ளது.

இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில், மோகன் ராஜா, இக்கதையில் எதிரி தான் ஹீரோவை தேடி வருவதாக சொல்கிறார். இந்த அறிவிப்பு வீடியோவை ஏ.எல்.விஜய் இயக்க சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். முதல் பாகத்தில் ஹீரோ தான்வில்லனை தேடிப் போவதாக கதை அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. வித்தியாசமான முறையில் வெளியான இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. .

thani oruvan 2 Nayanthara mohan raja jayam ravi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe