Skip to main content

இரண்டு இயக்குநர்களை இயக்கும் தங்கர் பச்சான்

 

Thangar Bachan directing two directors

 

தமிழ் சினிமாவில், கிராமத்து பின்னணியில் அழுத்தமான கதைகளை அழகாக தன் படங்களில் காண்பித்தவர் தங்கர் பச்சான். இவர் இயக்கத்தில் கடைசியாக 'களவாடிய பொழுதுகள்' படம் வெளியானது. அடுத்ததாக 'தக்கு முக்கு திக்கு தாளம்' படத்தை இயக்கி வருகிறார். தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மிலானோ நாகராஜ், அஷ்வினி மற்றும் ராம்தாஸ் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். 'பி.என்.எஸ் என்டர்டைன்மெண்ட்' தயாரிக்கும் இப்படத்திற்கு தரன் குமார் இசையமைக்கிறார்.    

 

இந்நிலையில் தங்கர் பச்சான் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் பாரதிராஜா, யோகி பாபு மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை வீரசக்தி தயாரிக்கிறார். தங்கர் பச்சான் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் குமார் முதல் முறையாக இப்படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்களுக்கு வைரமுத்து வரிகள் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 25-ஆம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளது.