Advertisment

"நான்கு நாட்களில் வேர்க்கடலை, பத்து நாட்களில் சின்ன வெங்காயம்" - இயற்கை விவசாயியாக மாறிய தங்கர் பச்சான்

thangar bachan create organic farming agriculture

திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், ஓவியர், நடிகர் என பன்முகத் திறமைக் கொண்டவராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் தங்கர் பச்சான். இவர் சமூக செயற்பாட்டாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

Advertisment

கிராமத்து பின்னணியில் இருந்துதான் வந்ததை மறக்காமல் இன்றும் தன் சொந்த ஊரான கடலூர் மாவட்டம், பத்திரக்கோட்டை கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு, "வீட்டுக்கான விளை பொருட்களை எங்களின் நிலத்திலேயே உற்பத்தி செய்து கொள்ளும் நோக்கில் ஒரு துளி கூட இரசாயன கலப்படமற்ற இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றேன். உளுந்து அறுவடை முடிந்து நான்கு நாட்களில் நாட்டு வகை வேர்க்கடலை பிடுங்க உள்ளது. பத்து நாட்களில் சின்ன வெங்காயம் காத்திருக்கிறது" என்று இயற்கை வேளாண்மையில் மேல் இருக்கும் தனது ஆர்வத்தை ட்வீட்டாக பதிவு செய்துள்ளார்.

Advertisment

agriculture thangar bachan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe