thangar bachan advised his son vijith bachan

Advertisment

தங்கர்பச்சான்இயக்கத்தில் அவரது மகன் விஜித் பச்சான் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டக்கு முக்கு டிக்கு தாளம்'. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடிக்க, முனீஸ்காந்த், மன்சூர் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தரண்குமார்இசையமைத்துள்ள இப்படம்விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் முதன்முறையாகதிரைத்துறையில் நாயகனாகஅறிமுகமாகும் தன்னுடைய மகன் விஜித்க்குதங்கர்பச்சான்அறிவுரைகூறியுள்ளார். அதில், "“நான் அணிந்திருக்கும் ஆடையை தயாரித்தவர்கள், உண்ணும் உணவை சமைத்தவர்கள், பயணிக்கும் சாலையை அமைத்தவர்கள், குப்பை அள்ளுபவர்கள், நாம் வாழக்கூடிய வீட்டைக் கட்டிக் கொடுத்தவர்கள் இவர்களின் பிள்ளைகள் காலம் காலமாக அங்கேயே தான் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி நினைத்துப் பார். நீ உன்னுடைய ஊதியத்தில் 10 விழுக்காடு அந்த பிள்ளைகளுக்கு ஒதுக்க வேண்டும். இந்த மனநிலைக்கு நீ தயாராகி விடு. நீ செய்வாய், இருந்தாலும் நான் சொல்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.