thangalaan teaser and release date update

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தங்கலான்'.ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

Advertisment

இந்தாண்டு இறுதிக்குள் படத்தை வெளியிடத்திட்டமிட்டுள்ளதாக முன்பு ஒரு செய்தியாளர்களின் சந்திப்பில் பா. ரஞ்சித் தெரிவித்த நிலையில், படத்தின் டைட்டில் அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பின் மேக்கிங் வீடியோ மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளது. இதையடுத்து படம் அடுத்தாண்டு தொடக்கத்தில் வெளியாகவுள்ளதாகத்தகவல் வெளியானது.

Advertisment

இதையடுத்து கடந்த 20 ஆம் தேதிஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித், "தங்கலான் படத்தின் முக்கியமான அப்டேட் இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் அறிவிக்கவுள்ளோம். கிட்டத்தட்ட டீசரும் ரெடியாகிவிட்டது. அதனால் டீசரோடு அந்த அறிவிப்பும் இருக்கும்" என்றார்.

அதன்படி படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி டீசர் நவம்பர் 1 ஆம் தேதியும் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதியும் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.