Thangalaan movie box office

Advertisment

விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தங்கலான். பா.ரஞ்சித் இயக்கத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் வெளியாவதற்கு முன்பு பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா ஏற்பாடு செய்து புரமோஷன் செய்தது படக்குழு. அந்த வகையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவை, மதுரை, சென்னை என பல்வேறு இடங்களில் புரமோஷன் செய்தது. மேலும், இப்படத்திலிருந்து டீஸர், ட்ரைலர் மற்றும் ‘மினிக்கி மினிக்கி...’, ‘வார் சாங்...’, ‘அறுவடை...’ ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

இந்நிலையில் இப்படம் சுதந்திர தினமான நேற்று (15.8.2024) வெளியான நிலையில், கலவையான விமர்சனத்துடன் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 26 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.