Advertisment

மாளவிகா மோகனன் பிறந்தநாளுக்கு தங்கலான் படக்குழு சர்ப்ரைஸ்

thangalaan malavika mohanan poster

Advertisment

ரஜினியின் 'பேட்ட' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மோகனன் விஜய்யின் 'மாஸ்டர்' படம் மூலம் பிரபலமானார். பின்பு தனுஷுடன் 'மாறன்' படத்தில் நடித்ததையடுத்து, தற்போது விக்ரமின் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். பா. ரஞ்சித் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துள்ளது.

இன்று மாளவிகா மோகனன், தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு சார்பில் மாளவிகா மோகனனுக்கு வாழ்த்து போஸ்டர் ஒன்றை பா.ரஞ்சித் சர்ப்ரைஸாக வெளியிட்டுள்ளார். மேலும் 'ஆரத்தி' என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த போஸ்டர் தற்போது மாளவிகா மோகனன் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Advertisment

pa.ranjith malavika mohanan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe