தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் நடிப்பில், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில், பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், இப்படத்தின் டிரெய்லர் கடந்த 10ஆம் தேதி வெளியானது. அதில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகம் தங்கம் எடுப்பதற்காக அடிமைப்படுத்தப்படுகிறார்கள் போல் தெரிந்தது. அதன் மூலம் வரும் பிரச்சனை தான் இப்படத்தின் கதை என்று யூகிக்க முடிந்தது. இந்த டிரெய்லரில் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை மிகவும் ரசிக்கக் கூடிய வகையில் இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த டிரெய்லரின் மூலம் இப்படம் தொடர்பாக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் தொடர்பான அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதில், ‘மினிக்கி மினிக்கி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள பாடல் வரும் 17ஆம் தேதி லிரிக்கல் வீடியோ வெளியாகும் எனக் குறிப்பிட்டு ஒரு புரோமோ வீடியோவெளியிடப்பட்டுள்ளது. அதில், விக்ரம், அவரது ஜோடியான பார்வதி மற்றும் அவர்கள் சார்ந்த மக்கள் பாடி ஆடுவது போல் அமைந்திருக்கிறது. கேட்ட உடனேயே ரசிக்கக்கூடிய இப்பாடலை சிந்துரி விஷால் பாடியிருக்கிறார். இப்படத்தின் இடம்பெறும் பாடலும், பின்னணி இசையும் பெரிதாக பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.