Advertisment

தம்பி படத்தை ரிலீஸ் செய்யும் பிரபல ஜப்பான் கம்பெனி! 

டிஸ்டிரிபியுஷனில் அடுத்தடுத்து அதிரடியாக படங்களை வெளியிடும் ஜப்பானை பூர்விகமாக கொண்ட 'சோனி டிஜிட்டல் சினிமா' என்னும் எஸ்.டி.சி பிக்சர்ஸ் நிறுவனம் தொரட்டி, திட்டம்போட்டுதிருடுறகூட்டம், காவியம் ஆகிய படங்களை சமீபத்தில் வெளியிட்டனர். மேலும் சேரனின் ராஜாவுக்குசெக்,திரிஷாவின்கர்ஜனை ஆகிய படங்களைவிரைவில் இந்நிறுவனம் வெளியிடவுள்ள நிலையில் கார்த்தியின் 'தம்பி' படத்தின் தமிழ்நாடு தியேட்ரிக்கல் உரிமையை எஸ்.டி.சி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Advertisment

karthi

கார்த்தி - ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் 'தம்பி' படத்தை ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். ஃபேமிலி டிராமா திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஜோதிகா, கார்த்தி அக்கா, தம்பியாக நடித்துள்ளனர். அப்பா அம்மாவாக சத்யராஜ், சீதா நடித்துள்ளார்கள். மேலும் இளவரசு, ஆன்சன் பால், பாலா, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக நிகிலா விமல் நடித்துள்ளார். 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விரைவில் முடிந்து வரும் டிசம்பர் 20ல் 'தம்பி' படம் வெளியாகவுள்ளது.

actor karthi karthi thambi
இதையும் படியுங்கள்
Subscribe