Skip to main content

”வயசுல சின்னவர், இல்லனா காலை தொட்டுக் கும்பிட்டிருப்பேன்” - கதறியழுத தம்பி ராமையா 

Published on 18/07/2022 | Edited on 18/07/2022

 

Thambi Ramaiya

 

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 24ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற மாமனிதன் திரைப்படம், ஆஹா ஓடிடி தளத்திலும் தற்போது வெளியாகியுள்ளது. சிறப்புக்காட்சியில் படம் பார்த்த நடிகர் தம்பி ராமையா, கண் கலங்கியபடி வந்து சீனு ராமசாமியை கட்டித்தழுவினார். 

 

அதன் பிறகு உருக்கமாகப் பேசிய தம்பி ராமையா, “இயக்குநர் சீனு ராமசாமி வெகுஜன மக்களை எளிதாக கனெக்ட் செய்யக்கூடிய ஒரு அற்புதமான படத்தை எடுத்திருக்கிறார். இந்தப் படத்தை திரையரங்கில் பார்க்காததற்கு அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன். இந்த படத்தை மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என இயக்குநர் மிஷ்கின் திரும்பதிரும்ப சொல்லிக்கொண்டு இருந்தார். மிஷ்கினின் பாராட்டைத்தான் அளவுகோலாக வைத்து படம் பார்க்க வந்தேன். ஒவ்வொரு வசனத்தையும் மனதில் இருந்து  சீனு ராமசாமி எழுதியிருக்கிறார். கமர்ஷியல் படம் எடுத்து பணம் சம்பாதித்தோம், கட்டிய மனைவி, குழந்தைகளை சந்தோஷப்படுத்தினோம் என்ற சிற்றின்ப வளையத்திற்குள் தன்னை உட்படுத்திக்கொள்ளாமல் பேரின்பம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு படைப்பை படைத்திருக்கிறார் சீனு ராமசாமி. அவர்தான் உண்மையான மாமனிதன். 

 

பல இடங்களில் என்னுடைய அப்பாவை விஜய் சேதுபதி நினைவுபடுத்திவிட்டார். தந்தை தோற்ற இடத்தில் பிள்ளை ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் என்ற வசனம் என் உயிரையே உலுக்கிவிட்டது. என்னைவிட சின்னவராக இருக்கிறார், இல்லையென்றால் சீனு ராமசாமியின் காலைத் தொட்டு கும்பிட்டிருப்பேன். இவ்வளவு சின்ன வயதில் காயத்ரி ஏற்று நடித்த இந்தப் பாத்திரம் என்பது நடிப்பு சரித்திரத்தில் அற்புதமான விஷயம். வயதான காலத்தை அடைந்த பிறகு என் வாழ்க்கையில் நான் என்ன சாதித்தேன் என்று காயத்ரி யோசித்து பார்த்தால் மாமனிதன் படத்தில் நடித்ததை அவர் பெருமையோடு நினைவுகூரலாம். அனைவரும் குடும்பத்தோடு முகம் சுழிக்காமல் வீட்டில் இருந்தே மாமனிதன் படத்தைப் பாருங்கள். நிச்சயம் உங்களுக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி மகிழ்ச்சிக்கடலில் உங்களை ஆழ்த்தும்” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அர்ஜுனுக்கு சம்பந்தியான தம்பிராமையா; ஐஸ்வர்யா - உமாபாரதி எங்கேஜ்மெண்ட் !

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

arjun daughter aishwarya thambi ramaiah son umapathy engagement

 

நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா. இவர் விஷால் நடித்த பட்டத்து யானை படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பின்பு தெலுங்கில் அர்ஜுன் இயக்கத்தில் வெளியான பிரேமா பராஹா படத்தில் நடித்திருந்தார். இவரும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். உமாபதி 'அதாகப்பட்டது மகாஜனங்களே' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.பின்பு மணியார் குடும்பம், திருமணம், தண்ணி வண்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

 

இந்த நிலையில் இருவரின் வீட்டாரின் சம்மதத்தோடு உமாபதி ராமையாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. சென்னை கெருகம்பாக்கதில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இந்த நிச்சய நிகழ்வு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த கோவிலை அர்ஜுன் கட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் இருவீட்டாரின் குடும்பங்களும் அவர்களது நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். 

 

விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பகிர்ந்து திரை பிரபலங்களும் ரசிகர்களும் புது தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 

 

 

Next Story

"கண்ணதாசன் போல் முடிவை மாற்றாமல் இருக்கிறார் சந்தானம்" - தம்பி ராமையா

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

thambi ramaiya speech in kick movie event

 

நவீன்ராஜ் தயாரிப்பில் சந்தானம், தான்யா ஹோப் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கிக்’. கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ராகினி திவிவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ள இப்படம் வருகிற செப்-1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

 

தம்பி ராமையா பேசும்போது, “ஒருமுறை முடிவை எடுத்து விட்டால் அதிலிருந்து மாறக்கூடாது என கவிஞர் கண்ணதாசன் சொன்னது போல தான் எடுத்த முடிவில் மாறாமல் இருக்கிறார் சந்தானம். சிலபேர் எப்போதும் தோற்கவே கூடாது என மக்கள் நினைப்பார்கள். அப்படி ஒருவர் தான் சந்தானம். டிடி ரிட்டன்ஸ் கொடுத்த வெற்றி இங்கே அனைவரின் முகத்திலும் தெரிகிறது. இயக்குநர் பிரசாந்த் ராஜ் நகைச்சுவை காட்சிகளை பிரமாதமாக வடிவமைத்துள்ளார். இந்த படத்தில் ஆணழகன் போல சந்தானம் காட்சியளிக்கிறார். ஹிந்தி படம் போல ஒரு தமிழ் படமாக இந்த கிக் உருவாகி இருக்கிறது. சந்தானம் தான் மட்டும் ஸ்கோர் செய்ய வேண்டும் என விரும்பாமல் தன்னை சுற்றியுள்ள அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்து அழகு பார்ப்பவர்” என்றார்.