Skip to main content

"எங்க குடும்பம் ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பம்" - தம்பிராமையா 

Published on 03/08/2018 | Edited on 03/08/2018

"1970களில் ஒவ்வொரு ஊரிலும் மணியார் குடும்பம், கணக்குப்பிள்ளை குடும்பம் என்று பரம்பரை பரம்பரையாக பதவிவகித்து வந்த குடும்பங்கள் இருந்தன. எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது அவையெல்லாம் நீக்கப்பட்டு அந்த முறை கைவிடப்பட்டது. அதுக்குப் பிறகும் இந்த குடும்பங்களைச் சேர்ந்த சிலர், மணியக்காரர் குடும்பத்து ஆள், கணக்குப்பிள்ளை குடும்பத்துப் பையன் என்று பெருமை பீத்திக்கொண்டு வேறு வேலைக்குச் செல்லாமல் இருக்கும் சொத்துகளை விற்றுத் தின்றே பிழைத்தார்கள்.

 

thambi ramaiah



மற்றவர்களெல்லாம் படித்து முன்னேறி வேறு வழியில் செல்ல இவர்களில் சிலரோ அந்தக் குடும்பப் பெருமையை சொல்லிக்கொண்டே வாழ்ந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு மணியக்காரர் குடும்பம்தான் எங்கள் குடும்பம். நன்றாக வாழ்ந்து கெட்ட குடும்பம். உமாபதியை வைத்து படமெடுப்பது என்று முடிவான பின்பு, வேறு கதைகளைத் தேடாமல் எங்கள் குடும்பத்துக் கதையையே மெருகேற்றி எடுத்தேன். இந்தப் படம், வாழ்ந்து கெட்டு மனமுடைந்து கிடக்கும் பல குடும்பங்களுக்கும் ஒரு உந்து சக்தியாக இருக்கும். நாமும் முன்னேறி பழைய நிலைக்கு வந்துவிடலாம் என்ற உத்வேகத்தைக் கொடுக்கும்" என்று நம்மிடம் தன் குடும்பக் கதையைப் பகிர்ந்துகொண்டார் தம்பி ராமையா.

 

 


இன்று (03-ஆகஸ்ட்-18) தம்பி ராமையா இயக்கத்தில் அவரது மகன் உமாபதி நடித்திருக்கும் 'மணியார் குடும்பம்' திரைப்படம் வெளியாகியுள்ளது. அது குறித்து பேசும்போதுதான் உருக்கமாகக் கூறிய செய்தி இது.  




 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"யாஷிகா ஏன் இப்படி பண்றாங்கன்னு தெரியல..." - உமாபதி s/o தம்பி ராமையா

Published on 06/08/2018 | Edited on 06/08/2018

'மணியார் குடும்பம்' திரைப்படத்தின் நாயகனும் நடிகர், இயக்குனர்  தம்பி ராமையாவின் மகனுமான உமாபதி 'பிக்பாஸ்' புகழ் யாஷிகா குறித்து பகிர்ந்தது...   

 

umapathy yashika

 

"இந்தப் படத்தில் ஒரு கலகலப்பான நாட்டுப்புற இசை பாடல் வரும். அதுல நடிக்க ஹிந்தி முகத்தோட ஒரு டான்ஸர் தேவைப்பட்டாங்க. ஹிந்தி இண்டஸ்ட்ரில எல்லாம் ஆர்ட்டிஸ்ட் தேடிட்டு இருந்தோம். அந்த நேரத்தில் யாஷிகா இன்ஸ்டாகிராமில் பிரபலம். அதனால் அவங்கள ட்ரை பண்ணலாம்னு பண்ணி இந்தப் படத்துக்குள்ள வந்தாங்க. நடிக்கும்போது எனக்கு நல்ல தோழியாகிட்டாங்க.

பிக்பாஸ் பொருத்த வரையில் பல பேர் அவரோட பிஹேவியர் பற்றி சொல்றாங்க. நானும் பார்த்தேன். 'ஏன் அவங்க இப்படி பண்றாங்க'ன்னுதான் எனக்கும் தோணுச்சு. ஏன்னா அது அவங்களோட 'கேரக்டர்' கிடையாது, மத்தவங்க தப்பு பண்றாங்கன்னு தெரிஞ்சும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி பொன்னம்பலம் சார்கிட்ட பேசறாங்க, அது ஏன்னு தெரியல, அவங்களோட இடத்தில்  இருந்து பார்த்தாதான் தெரியும். ஆனா பிக்பாஸில் இருந்து வெளிய போறவங்க எல்லாரும் அவங்கள 'ட்ரூ ஹார்ட் (true heart), கைன்ட் பர்சன்' (kind person) அப்படின்னு பாஸிட்டிவாதான் சொன்னாங்க. அதுதான் அவங்களோட உண்மையான கேரக்டர். எல்லாரும் அவங்கள அடுத்த 'ஓவியா'ன்னு சொல்றாங்க, ஆனா அப்படிலாம் இல்லை. காரணம் ஓவியா ஒரு டெம்ப்ளேட் கொடுத்துட்டு போய்ட்டாங்க. அதனால இவங்க என்னதான் முட்டி மோதி தலைகீழா நின்னாலும் அவுங்களாக முடியாது. எனக்கெல்லாம் வாய்ப்பு கிடைச்சாலும் நான் கண்டிப்பா பிக்பாஸ் வீட்டுக்குள் போகமாட்டேன். ஏன்னா  அங்க நடக்கிறத அப்படியே 'ரியலிஸ்டிக்கா' காட்டிட்டா பிரச்சனை இல்லை, சில இடத்தில் 'அப்ஸ் அண்ட் டௌன்ஸ்' இருக்கு. 

 

 

 

Next Story

மீண்டும் டைரக்டராகும் தம்பி ராமையா 

Published on 01/06/2018 | Edited on 02/06/2018
thambhi ramiah


குணச்சித்திர வேடங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகர் தம்பி ராமையா மனுநீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் ஆகிய படங்களின் டைரக்டரும் ஆவார். இந்நிலையில் இவருடைய மகனும் தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். 'அதாகப்பட்டது மகாஜனங்களே' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆன இவர் தற்போது தன் தந்தை தம்பி ராமையா இயக்கத்தில் 'மணியார் குடும்பம்' என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இதையடுத்து இப்படத்திற்கு இசையமைக்கும் கூடுதல் பொறுப்பையும் ஏற்ற தம்பி ராமையா இப்படம் குறித்து பேசும்போது.... "இது வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தை பற்றிய கதை. ஒரு குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. வேலை எதுவும் செய்யாமல் ஊர் சுற்றும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அவள் வந்த பின் அவனுடைய வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது என்பதே கதை.

 

என் மகன் உமாபதி நடித்துள்ள 2 வது படத்தையும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக ஐந்து மாதங்களாக நான் நடிக்கவில்லை. இதில் உமாபதி ஜோடியாக கேரளாவை சேர்ந்த மிருதுளா மேரி நடித்துள்ளார். சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ராதாரவி, ஜெயப்பிரகாஷ், சிங்கமுத்து, சிங்கம்புலி, மொட்ட ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். மேலும் நான் முதன்முறையாக இசையமைத்திருக்கும் இப்படத்தில் டி.இமான் ஒரு பாடலை பாடியிருக்கிறார். "என் மனசுக்குள்ள நீ புகுந்து...'' என்று தொடங்கும் அந்த பாடலை ரூ.40 லட்சம் செலவில் அரங்கு அமைத்து படமாக்கியிருக்கிறோம். சென்னை, புதுக்கோட்டை, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. தந்தை, மகன் இடையேயான பாசப் பிணைப்பை சொல்லும் படம், இது. இதில் நானும், உமாபதியும் தந்தை, மகனாகவே நடித்து இருக்கிறோம். இந்த படத்தை எல்லோரும் பார்க்கும் வகையில் தணிக்கை குழுவினர், `யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்" என்றார்.