Advertisment

''மூன்று வருடங்களாகப் பேசி இப்போதுதான் ஓகே ஆனது!'' - விஜய் படம் குறித்து தமன் விளக்கம்! 

hh

Advertisment

'மாஸ்டர்' படத்தை அடுத்து நடிகர் விஜய் மீண்டும் நான்காவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். துப்பாக்கி படத்தின் இரண்டாவது பாகமாக இது உருவாகவுள்ளதாகச் சமீபத்தில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இப்படம் துப்பாக்கி 2 இல்லை என்றும், இது ஒரு புதிய கதையம்சம் கொண்ட படமாக முருகதாஸ் எடுக்கவுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விஜய் படத்துக்கு முதன்முறையாக இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார் இசையமைப்பாளர் தமன். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் இப்படத்திற்கு இசையமைப்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தமன் கூறியுள்ளார். அதில்... ''விஜய் படத்திற்கு இசையமைக்கவுள்ளதை மிகவும் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். மூன்று வருடங்களாக இதுகுறித்து பேசி வருகிறோம். இப்போதுதான் எல்லாம் கைகூடி வந்துள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்'' என விளக்கமளித்துள்ளார். தமன் இசையில் சமீபத்தில் வெளியான 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் 'புட்ட பொம்மா' பாடல் உலகமெங்கும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

thaman thalapathy 65 vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe