இசையமைப்பாளர் தமனுக்கு கரோனா தொற்று!

thaman tested positive covid19

இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, இந்தியாவில் உள்ள முக்கிய நபர்கள் மற்றும் திரை பிரபலங்களுக்குகரோனாதொற்று ஏற்படுகிறது.

அந்தவகையில்பிரபல இசையமைப்பாளர் தமனுக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறி இருந்ததால்மருத்துவரின் ஆலோசனை படிவீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளுமாறுகேட்டுக் கொண்டுள்ளார்.

தமன் 'எஸ்.கே20' படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமான நிலையில் நேற்று சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினருடன் இணைந்து உணவகம் ஒன்றில் உணவருந்தியுளளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.

actor sivakarthikeyan covid 19 sk 20 thaman
இதையும் படியுங்கள்
Subscribe