“படத்தின் கலெக்‌ஷன் பார்த்த பின்புதான் நிம்மதி வந்தது” - தமன்

286

அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘ஒரு நொடி’ பட இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கத்தில் தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 18ஆம் தேதி வெளியான படம் ‘ஜென்ம நட்சத்திரம்’. சஞ்சய் மாணிக்கம் என்பவர் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில், தமன் பேசுகையில், “என்னுடைய முந்தைய படமான ‘ஒரு நொடி’ அதன் பட்ஜெட்டை எங்களுக்கு திரும்ப கொடுத்தது. ஆனால், ‘ஒரு நொடி’ படத்தின் மொத்த பட்ஜெட்டை ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் மூன்று நாள் கலெக்‌ஷன் கொடுத்துள்ளது. இதற்கு ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் சாரின் ஆதரவு முக்கியமானது. படத்தை அருமையாக மார்க்கெட்டிங் செய்த அமோகம் பிக்சர்ஸூக்கும் நன்றி. 

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு படக்குழுவில் யாரும் சரியாக தூங்கவில்லை. ஆனால், படம் ரிலீஸ் ஆன பின்பு கலெக்‌ஷன் பார்த்த பின்புதான் நிம்மதியாக இருந்தது. தமிழ்நாட்டில் 150 திரையரங்குகளில்தான் முதலில் படம் திரையிட்டோம். மக்கள் கொடுத்த ஆதரவிற்கு பிறகு 200- 250 என்ற எண்ணிக்கையில் ஸ்கிரீன் எண்ணிக்கை அதிகரித்தார்கள். ஒவ்வொரு படத்திலும் கற்றுக் கொள்ள விஷயங்கள் இருக்கும். ஆனால், இந்தப் படம் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்தது” என்றார்.

actor tamil cinema
இதையும் படியுங்கள்
Subscribe